ஓட்டலில் ரகளை; தட்டிக்கேட்ட கேஷியருக்கு கத்திவெட்டு


ஓட்டலில் ரகளை; தட்டிக்கேட்ட கேஷியருக்கு கத்திவெட்டு
x
தினத்தந்தி 13 Sept 2021 10:11 PM IST (Updated: 13 Sept 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டலில் ரகளை செய்தவர்களை தட்டிக்கேட்ட கேஷியருக்கு கத்திவெட்டு விழுந்தது.

மூலக்குளம், செப்.
புதுச்சேரி நடேசன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் குடிபோதையில் ஓட்டல் ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு கேஷியராக வேலை செய்யும் செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூரை சேர்ந்த கார்த்திக் (வயது 30) தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கை குத்தி விட்டு தப்பிச்சென்றனர். இதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனே அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story