மாவட்ட செய்திகள்

பயணி தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார் + "||" + jewel

பயணி தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார்

பயணி தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார்
பயணி தவறவிட்ட நகையை மீட்டு போலீசார் ஒப்படைத்தனர்
திருப்புவனம், 
பரமக்குடி அருகே நல்லிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா. இவர் மதுரையில் தனியார் பஸ்சில் இருந்து திருப் புவனம் வந்துள்ளார். பஸ்சில் இருந்து இறங்கிய உடன் தான் அருகில் வைத்திருந்த பையை எடுக்காமல் மறந்து இறங்கி விட்டார். அந்தப் பையில் 2 பவுன் செயின், ரூ. 500-ம் இருந் துள்ளது. இதுகுறித்து உடனடியாக திருப்புவனம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்து திருப்புவனம் போலீசார் சீனிவாசன், சசிவர்ணம் ஆகிய 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் அனுப்பி உள்ளார். போலீஸ்காரர்கள் 2 பேரும் சென்று பஸ்சில் இருந்த பையை எடுத்து வந்து 2 பவுன் செயின், ரூ. 500-ஐ உரியவரிடம் ஒப்படைத்தனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை