மாவட்ட செய்திகள்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை + "||" + Teen commits suicide by fire

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கெண்டார்.
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரா(30). இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சிவயோகன்(2) என்ற மகன் உள்ளார். ரமேசுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளதால் சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் போனது. இதனால் அவ்வப்போது கணவன்- மனைவிக்கு இடையே வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திரா தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் உள்ள கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தனது உடலில் மண்எண்ணையை  ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில் சந்திராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சந்திரா உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி  வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. திருச்செந்தூர்: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
2. உடற்பயிற்சிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே உடற்பயிற்சிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
3. இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
அன்னூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.