நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 13 Sep 2021 5:17 PM GMT (Updated: 13 Sep 2021 5:17 PM GMT)

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இதனால் நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
 இந்த நிலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நேற்று மதியத்துக்கு மேல் ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே கரையை கடந்தது. இது மேலும் வட மேற்கு திசையில் சத்தீஸ்கர் மாநிலம் மத்தியபிரதேசத்தை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.  
இதனால் நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்ட 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 9 மணி நேரத்துக்கு பின்பு மதியம் 1.30 மணியளவில் இறக்கப்பட்டது.
மீனவர்கள் பிடிக்க செல்லவில்லை
நாைக துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதால் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு  செல்லவில்லை. முன்னதாக நேற்று காலை மீன் பிடிக்க 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போதுல கடலில் காற்று அதிகமாக இருந்ததால் மீனவர்கள் அவசரம், அவசரமாக கரைக்கு திரும்பி வந்தனர். இதை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள்  காரையோரத்தில் பாதுகாப்பாக  நிறுத்தி வைத்திருந்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story