மின் திருட்டில் ஈடுபட்ட 7 பேருக்கு ரூ.5¾ லட்சம் அபராதம்
மின் திருட்டில் ஈடுபட்ட 7 பேருக்கு ரூ.5¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை
திருச்சி, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அ.மேட்டூர், கடம்பூர், வேப்படி, பாலக்காடு, பூலாம்பாடி, கை.களத்தூர் மற்றும் சிறுநிலா கிராமங்களில் மின்திருட்டு முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது முறைகேடாக மின் திருட்டில் ஈடுபட்ட 7 பேரை பிடித்து அவர்களிடமிருந்து மின் இழப்பீட்டு தொகை மற்றும் சமரச தொகை என ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 418 வசூல் செய்யப்பட்டது. மேலும் இது போன்ற மின்திருட்டு முறைகேடுகளில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story