திருக்கோவிலூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை


திருக்கோவிலூர் அருகே  என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Sept 2021 10:53 PM IST (Updated: 13 Sept 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் கோமதி(வயது 20). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு படித்து வந்த இவர் தற்போது கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்தார். 

சம்பவத்தன்று வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த கோமதியை அவரது தாய் சரளா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். வலி தாங்க முடியாமல் கோமதி எழுப்பிய கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கோமதி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story