உள்ளாட்சி தேர்தல் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 13 Sept 2021 10:58 PM IST (Updated: 13 Sept 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்
9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் கருப்பு முருகானந்தம், துரைசாமி, ராஜா, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பி.ராமலிங்கம், கு.க.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி பேசினர். இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story