கள்ளக்குறிச்சி அருகே 10 ம் வகுப்பு மாணவர் மர்மசாவு


கள்ளக்குறிச்சி அருகே  10 ம் வகுப்பு மாணவர் மர்மசாவு
x
தினத்தந்தி 13 Sept 2021 11:03 PM IST (Updated: 13 Sept 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே 10 ம் வகுப்பு மாணவர் மர்மசாவு போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பெருமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் மகன் சதாசிவம்(வயது 15).தண்டலை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் கரும்பு வயலில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதை அறிந்து வந்த அவரது தாய் கற்பகவள்ளி கிராமமக்கள் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக கள்ளகுறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதாசிவம் பரிதாபமாக இறந்தார். அவர் எவ்வாறு இறந்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
இது குறித்து கற்பகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story