அறந்தாங்கியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு 1 ஆண்டு சிறை
வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியை சேர்ந்தவர் ரெங்கதுரை (வயது 43). இவர் தனது மனைவியிடம் தகராறு செய்து, துன்புறுத்தி வரதட்சணை கேட்டதாக கடந்த 2005-ம் ஆண்டு இவர் மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அறந்தாங்கி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி, ரெங்கதுரைக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story