விழுப்புரம் தனியார் ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு சிகிச்சை
விழுப்புரம் தனியார் ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்பட 7 பேர், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இதில் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளன், மருத்துவ சிகிச்சை பெற தமிழக அரசு பரோல் வழங்கியது. இதையடுத்து பேரறிவாளன், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் நேரில் வந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் பேரறிவாளன் நேற்று ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக்குழுவினர் உரிய பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மாலையில் அவர், போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story