ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2021 5:43 PM GMT (Updated: 13 Sep 2021 5:43 PM GMT)

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சத்துணவு சங்க மாவட்ட தலைவர் முருகன், அங்கன்வாடி சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா ஆகியோர் தலைமை தாங்கினர். வேலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன்ராஜ், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகஅரசு ஓய்வூதிய விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, குடும்ப ஓய்வூதியம், இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும், கொரோனா பரவல் காரணமாக அனைத்து ஓய்வூதியருக்கும் 2021 நேர்காணல் ரத்து செய்ததுபோல் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியருக்கும் நேர்காணலை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story