புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல் மரம் கண்டெடுப்பு


புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல் மரம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 13 Sept 2021 11:15 PM IST (Updated: 13 Sept 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

பழமையான கல் மரம் கண்டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரிமேட்டின் ஒரு பகுதியில் கூழாங்கல் சுண்ணாம்பு கற்கள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த பகுதியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வாளரான புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது 15 செ.மீ. நீளம், 10.5 செ.மீ. அகலத்தில் கல்மரம் ஒன்றை கண்டெடுத்தார். அதை மேலாய்வுக்காக பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இனியனிடம் ஒப்படைத்தார். இந்தகுறித்து பாண்டியன் கூறுகையில், இந்த கல்மரமானது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கிரேட்டேசியஸ் காலத்தை சேர்ந்தது. அதாவது தற்போதுள்ள பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பேர்ம் வகையை சேர்ந்தது. இது அறிய தொல்லியல் பொருளாக கருதப்படுகிறது. இப்பகுதியை தமிழக அரசு ஆய்விற்கு உட்படுத்தினால் மேலும் இதுபோன்ற அறிய தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என்றார். ஏற்கனவே கடந்த 2016-ல் இதே பகுதியில் தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டெடுக்கப்பட்ட கல்மரம் ஒன்று புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story