ஓடும் ரெயிலில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்


ஓடும் ரெயிலில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Sept 2021 11:27 PM IST (Updated: 13 Sept 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

காட்பாடி

விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயில் பெட்டியில் காட்பாடி ரெயில்வே போலீசார் ஏறி சோதனை நடத்தினர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 120 பாக்கெட் பீடி மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை காட்பாடி ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை வேலூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story