மாவட்ட செய்திகள்

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு + "||" + Attack

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
தளவாபாளையம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நொய்யல்,
பெட்ரோல் விற்பனை நிலையம்
நடையனூர் அருகே சொட்டியூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாசன் ( வயது22). இவர் தளவாபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வாங்கல் அருகே செவ்வந்திபாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா (25) என்பவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளார். இதற்கு காளிதாசன் பணம் கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா பணம் தர முடியாது என்று கூறி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. 
4 பேர் மீது வழக்கு
மேலும், இளையராஜா மற்றும் அவருடன் வந்திருந்த 3 பேர் சேர்ந்து காளிதாசனை சரமாரியாக தாக்கி பணம் கேட்டால் பெட்ரோல் நிலையத்தை தீ வைத்து எரித்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து  வேலாயுதம்பாளையம் போலீசில் காளிதாசன் புகார் அளித்தார்.இதையடுத்து, இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வடக்கு வசீரிஸ்தானில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்; 2 பாகிஸ்தானிய வீரர்கள் பலி
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. தாசில்தார் மீது தாக்குதல்
மணப்பாறையில் தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்; கிருஷ்ணர் சிலை உடைப்பு
பாகிஸ்தான் நாட்டில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கிருஷ்ணர் சிலையை உடைத்து உள்ளனர்.
4. டாஸ்மாக் கடை முன் படுத்து உருண்ட தொழிலாளியை சரமாரியாக தாக்கிய பெண்
டாஸ்மாக் கடை முன் படுத்து உருண்ட தொழிலாளியை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கினார்.
5. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 30 வீரர்கள் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 30 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.