திண்டிவனம் ஆசிரியருடன் இளம்பெண் ஓட்டம்


திண்டிவனம் ஆசிரியருடன் இளம்பெண் ஓட்டம்
x

திண்டிவனம் ஆசிரியருடன் இளம்பெண் ஓட்டம்

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள அயனாவரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகள் கவுசல்யா. இவருக்கு, வாலிபர் ஒருவருடன் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் டெய்லர் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கவுசல்யா வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. விசாரணையில் கவுசல்யா நொளம்பூர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்றிருப்பதும் தெரியவந்தது. 
அவமானம் தாங்காமல் கவுசல்யாவின் தாய் தாட்சாயிணி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story