ஜோலார்பேட்டை அருகே ஏரி மண் கடத்திய 2 டிப்பர் லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ஏரி மண் கடத்திய 2 டிப்பர் லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை அருகே சாலைநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் 2 டிப்பர் லாரிகளில் மண் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலிசாரை பார்த்ததும் அவர்கள் டிப்பர் லாரி மற்றும் பஒக்லைன் எந்திரத்தை விட்டு விட்டு தப்பி சென்றனர்.
அதைத்தொடர்ந்து 2 டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்த டிரைவர் லோகநாதன் (வயது 40), வாகன உரிமையாளர் கட்டேரி பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மனைவி வித்யா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story