மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம்: மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு 10-வது இடம் + "||" + corona camp

கொரோனா தடுப்பூசி முகாம்: மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு 10-வது இடம்

கொரோனா தடுப்பூசி முகாம்: மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு 10-வது இடம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியதில் மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு 10-வது இடம் கிடைத்தது.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 620 மையங்கள் மற்றும் 80 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு வரை நடைபெற்றது. இதில் நாமக்கல் நகராட்சி பகுதியில் ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். மாவட்டம் முழுவதும் 85 ஆயிரத்து 375 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 65,652 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 19,723 பேரும் செலுத்தி கொண்டனர். மொத்தம் 85,375 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தடுப்பூசி அதிகம் போட்டு கொண்டவர்களில் மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 10-வது இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.