மாவட்ட செய்திகள்

ஓசூரில்கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்துவேன் டிரைவர் கைது + "||" + Screaming at the construction worker

ஓசூரில்கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்துவேன் டிரைவர் கைது

ஓசூரில்கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்துவேன் டிரைவர் கைது
ஓசூரில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
ஓசூரில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கத்திக்குத்து
திருவண்ணாமலை புது வாணியர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவர் சொந்த வேலையாக ஓசூருக்கு வந்திருந்தார். இவரும், உறவினர் பார்த்திபன் என்பவரும் ஓசூர் பேடரப்பள்ளியில் மது குடித்து கொண்டிருந்தனர். 
அப்போது, பேடரப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (35) என்ற வேன் டிரைவர் அங்கு வந்தார். அவருக்கும், மணிவண்ணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் தான் வைத்திருந்த கத்தியால் மணிவண்ணனை சரமாரியாக குத்தினார். 
வேன் டிரைவர் கைது
இதில் படுகாயம் அடைந்த மணிவண்ணன் சிகிச்சைக்காக ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.