மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை + "||" + Newcomer suicide

புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஏர்வாடி:
புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுமாப்பிள்ளை

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள மேலமாவடியை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 25). தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சிறிது நாட்களிலேயே அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து அவரது மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துக்குட்டி, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு முத்துக்குட்டி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

களக்காடு அருகே உள்ள பத்மநேரி மருதப்பர் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகள் இந்து (23). கல்லூரி படிப்பை முடித்து விட்டு, வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த இந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்
2. திருக்கோவிலூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை
திருக்கோவிலூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தீக்குளித்து தற்கொலை
3. திருமணத்திற்கு மகன் அழைக்காததால் தந்தை தற்கொலை
திருமணத்திற்கு மகன் அழைக்காததால் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
4. பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. தற்கொலை
வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.