கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2021 12:35 AM IST (Updated: 14 Sept 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணகுடி:

பணகுடி, பழவூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் காவல்கிணறு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பணகுடி சிவகாமிபுரம் ராமையா (வயது 36), மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த திருப்பதி (40), குமார் (40) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீ்சார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.30,000 மற்றும் 1,500 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர்.

Next Story