சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2021 12:55 AM IST (Updated: 14 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம் நடத்தினர்

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணை தலைவர்கள் அன்புமணவாளன், மாரிக்கண்ணு, யாசிந்த், சுப்பையா மற்றும் சங்க நிர்வாகிகள் காயாம்பூ, முகமது அனிபா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ரூ.ஆயிரத்து 400 ஊதிய உயர்வு குறித்த அரசாணை 20-ல் உள்ள குளறுபடிகளைக் களைந்து திருத்தம் செய்து வெளியிட வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் தோறும் வங்கிகள் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குனர்கள், தூய்மை காவலர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story