வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்
சேதுபாவாசத்திரம் வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம் உள்ளது. எனவே வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம் உள்ளது. எனவே வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயி சாவு
சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது50). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் இரவு உடல்நலக்குறைவால் இறந்தார். இந்தநிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது.
வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் இருந்து முடச்சிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கான மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கல்லணை கால்வாயின் கிளை பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
பாலம் அமைத்து தர வேண்டும்
இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி தூக்கி சென்றனர். எனவே வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
வெயில் காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வராதபோதும் ஓரளவு சமாளித்து ஆற்றில் இறங்கி இறந்தவரின் உடலை மறுகரைக்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் நடத்தி வருகின்றோம். ஆனால் மழைக்காலங்களில், வாய்க்காலில் தண்ணீர் வரும் போது இறந்்தவரின் உடலை வாய்க்காலை கடந்து மறுபுறம் கொண்டு செல்ல அவதிப்பட்டு வருகிறோம். பாதை வழியாக செல்ல வேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். எனவே வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்து தந்தால் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல வசதியாக இருக்கும் என்றனர்.
Related Tags :
Next Story