புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பலி


புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 Sept 2021 1:46 AM IST (Updated: 14 Sept 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பலியாகினர்

தா.பேட்டை
நாமக்கல் மாவட்டம் பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 45). இவருக்கும், துறையூரை சேர்ந்த அபிராமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 4 வயதில் மகன் உள்ளான். அபிராமியின் தந்தை துறையூர் தீரன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் பாஸ்கர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர், பாஸ்கர் தனது பெற்றோரை பார்ப்பதற்காக பவித்திரம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவருடன், அவரது நண்பர் மணிகண்டனும்(30) சென்றார். தா.பேட்டை அருகே தேவரப்பம்பட்டி-கண்ணனூர் பாளையம் செல்லும் வழியில் அவர்கள் வந்த போது சாலையோர புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.  


Next Story