மாவட்ட செய்திகள்

10 பவுன் நகைகள் திருட்டு + "||" + Theft of 10 pound jewelery

10 பவுன் நகைகள் திருட்டு

10 பவுன் நகைகள் திருட்டு
ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு போயின.
திருவெறும்பூர்
 திருவெறும்பூர் அருகே உள்ள அம்மன் நகர் விஸ்தரிப்பு 6-வது தெருவை சேர்ந்தவர் செல்லையன் (வயது 64). பாய்லர் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த 2-ந் தேதி சென்னை கல்பாக்கத்தில் உள்ள தனது மகளை பார்க்க சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 
இதனால், அதிர்ச்சி அடைந்த அவா் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.