7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வரைவு வாக்காளர் வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மேகநாதரெட்டி வெளி யிட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வரைவு வாக்காளர் வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மேகநாதரெட்டி வெளி யிட்டார்.
வாக்குச்சாவடிகள்
இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார்.
7 சட்டமன்ற தொகுதிகள் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர்
அதேபோல சாத்தூர் தொகுதியில் 283 வாக்குச்சாவடிகளும், சிவகாசி தொகுதியில் 276 வாக்குச்சாவடிகளும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குச்சாவடிகளும், அருப்புக்கோட்டை சட்டமன்றத்தொகுதியில் 252 வாக்குச்சாவடிகளும், திருச்சுழி தொகுதியில் 273 வாக்குச் சாவடிகளும் ஆக மொத்தம் 1,861 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என அதற்கான வரைவு பட்டியலை கலெக்டர் மேகநாத ரெட்டி நேற்று வெளியிட்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியம், சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story