கொரோனா தடுப்பூசி போடும் முகாமில் தள்ளுமுள்ளு
சேத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாமில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தளவாய்புரம்,
சேத்தூர் பஸ் நிலையம் அருகில் நேற்று 2-வது நாளாக18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொேரானா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்களில் சிலர் நாங்கள் காலை 8 மணியிலிருந்து காத்திருக்கிறோம். எங்களுக்கு பின்னால் வந்தவர்களுக்கு தடுப்பூசி போடுகிறீர்கள். எங்களுக்கு இன்னும் ஏன் போடவில்லை என சுகாதார செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபற்றி சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களை வரிசையில் நிற்க செய்து கொரோனா தடுப்பூசி போட்டனர்.
Related Tags :
Next Story