பெங்களூருவில் 144 தடை உத்தரவு 27-ந் தேதி வரை நீட்டிப்பு - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவிப்பு


பெங்களூருவில் 144 தடை உத்தரவு 27-ந் தேதி வரை நீட்டிப்பு - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2021 8:49 PM GMT (Updated: 13 Sep 2021 8:49 PM GMT)

பெங்களூருவில் கொரோனா காரணமாக வருகிற 27-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், 144 தடை உத்தரவையும் நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

27-ந் தேதி வரை நீட்டிப்பு

  பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதாவது இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதுபோல், கொரோனா பரவலை தடுக்கவும், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கவும் பெங்களூருவில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

  இந்த நிலையில், கொரோனா 3-வது அலை உருவாகும் பீதி இருந்து வருவதால், பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை வருகிற 27-ந் தேதி வரை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறி இருப்பதாவது:-

144 தடை உத்தரவு

  பெங்களூருவில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த இரவு நேர ஊரடங்கு வருகிற 27-ந் தேதி அதிகாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல், பெங்களூருவில் பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் வருகிற 27-ந் தேதி வரை அமலில் இருக்கும். 

இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் யாரும் சுற்றி திரிவதற்கு அனுமதி கிடையாது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் 4 பேருக்கு மேல் பொது இடங்களில் சேருவதற்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில் இந்த 144 தடை உத்தரவு பஸ், ரெயில், விமான நிலையங்களுக்கு பொருந்தாது.
  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story