மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு- வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு- வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 13 Sep 2021 8:55 PM GMT (Updated: 13 Sep 2021 8:55 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை
தமிழக டெல்டா பாசன பகுதிகளில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு 3 வாரங்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாக பாசன பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 11-ந் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
16 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
இந்த நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை மேலும் அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மாலை 6 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75.87 அடியாக இருந்தது.

Next Story