லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2021 2:35 AM IST (Updated: 14 Sept 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று அய்யலூர் பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அய்யலூர் கடவூர் பிரிவு அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற திருச்சி மாவட்டம், மணப்பாறை ராஜீவ் நகரை சேர்ந்த கோபிநாத் (வயது 35), கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்த கிருஷ்ணன் (54), வடமதுரை அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த பெரியசாமி (47) ஆகிய 3 பேரை பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 310 லாட்டரி சீட்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story