மாவட்ட செய்திகள்

சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மகனின் கார் கவிழ்ந்து விபத்து-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் + "||" + car accident

சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மகனின் கார் கவிழ்ந்து விபத்து-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மகனின் கார் கவிழ்ந்து விபத்து-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மகன் ஓட்டி வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அன்னதானப்பட்டி:
சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மகன் ஓட்டி வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
எம்.எல்.ஏ. மகன்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் பா.ஜனதா கட்சியில் தேசிய மகளிர் அணி தலைவியாகவும் உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகன் ஆதர்ஷ் (வயது 23). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் அவர் இரவில் கோவையில் இருந்து சொகுசு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார். கார் இரவு 11.30 மணி அளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. பாலத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி வேகமாக சென்றது. பின்னர் அந்த கார் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் இருந்த ஆதர்சை அவர்கள் மீட்டனர். காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் அவருடைய காரின் கண்ணாடிகள் உடைந்ததுடன் பலத்த சேதமடைந்தது. மேலும் அந்த கார் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.  விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு,  முன்னாள் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் அங்கு விரைந்து சென்று ஆதர்ஷை பாதுகாப்பாக வேறு ஒரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மகன் ஓட்டி வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.