மாவட்ட செய்திகள்

சங்ககிரி அருகே பரிதாபம்: காதலி பேச மறுத்ததால் தொழிலாளி தற்கொலை + "||" + Worker suicide

சங்ககிரி அருகே பரிதாபம்: காதலி பேச மறுத்ததால் தொழிலாளி தற்கொலை

சங்ககிரி அருகே பரிதாபம்: காதலி பேச மறுத்ததால் தொழிலாளி தற்கொலை
சங்ககிரி அருகே காதலி பேச மறுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே காதலி பேச மறுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மில் தொழிலாளி
சங்ககிரி அருகே சன்னியாசிபட்டி பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில்லில், மலைதிருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மாறன் மகன் வேடி முத்து (வயது 23) என்பவர் மில்லில் தங்கி இருந்து வேலை பார்த்து  வந்தார்.
இதற்கிடையே தான் தங்கி இருந்த அறையில் வேடிமுத்து தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக தொங்கிய வேடிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலி பேச மறுப்பு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேடிமுத்து ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் கடந்த சில நாட்களாக வேடிமுத்துவிடம் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட தொழிலாளி வேடிமுத்து, அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.