கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி ‘கொரோனா வார்டு’ நர்சுகள் திடீர் ஆர்ப்பாட்டம்


கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி ‘கொரோனா வார்டு’ நர்சுகள் திடீர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2021 5:23 AM IST (Updated: 14 Sept 2021 5:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியின் ‘கொரோனா வார்டில்’ பணியாற்றிய நர்சுகள் நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து எம்.ஆர்.பி. ‘கோவிட்’ செவிலியர்கள் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் ராஜேஷ் கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுகளில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி அமர்த்தப்பட்டோம். கடந்த டிசம்பர் மாதம் எங்களது பணிக்காலம் முடிவடைந்தபோதிலும், கொரோனா தாக்கம் காரணமாக எங்களது பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இந்தநிலையில் எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த விடுதி வசதிகளை தற்போது இல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனா பணியில் ஈடுபடுகிறவர்கள் என்றால் வெளியே எங்கும் தங்க முடியவில்லை. மேலும் சீருடையுடன் ரெயில்கள் மற்றும் பஸ்களில் பணிக்கு வருகிறபோது அனைவரும் தள்ளியே நிற்கின்றது கூடுதலாக வேதனை அளிக்கிறது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு, எங்களுக்கு விடுதி வழங்கவும், தொகுப்பு ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story