மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Plus-1 student commits suicide by hanging

பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பிளஸ்-1 படித்து வந்த மாணவி, தனது வீ்ட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திரு.வி.க.நகர்,

சென்னை திரு.வி.க. நகர், கென்னடி சதுக்கம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகள் காவியா (வயது 17). இவர், பெரம்பூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை காவியாவுக்கும், அவருடைய தம்பிக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்து வைத்த அவர்களது பெற்றோர், பின்னர் வெளியே சென்றுவிட்டனர்.


தூக்குப்போட்டு தற்கொலை

இதில் மனம் உடைந்த காவியா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டார். தனது அக்கா, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி, தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக வந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவியாவை மீட்டு பெரியார் நகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், காவியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் தாக்கி மாணவி சாவு
நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவி பலி ஆனார்.
2. ஏரிக்கரையோரம் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
மப்பேடு அருகே ஏரிக்கரையோரம் இருந்த முட்செடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
3. கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் கைது
தாம்பரம் ரெயில்நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
4. குடும்பத் தகராறில் விபரீதம் 3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை
வேலூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.