வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு


வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 14 Sept 2021 7:44 PM IST (Updated: 14 Sept 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு

கோவை

கோவை மாவட்டத்தில் 16 உள்ளாட்சி இடங்களுக்கான இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்குவதை தடுக்க  பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் உள்பட உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில், தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. 

கோவை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்பட 16 இடங்களுக்கு உள்ளாட்சி இடைதேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது. 


இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 131 வாக்குச்சாவடிகள் அமைக்கப் படுகின்றன. இடைதேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது

நடத்தை விதிமுறைகள்

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தல் நடைபெற உள்ளதால் அன்னூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். 

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் தென்குமாரபாளையம், ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஆகிய ஊராட்சிகளில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. 

எனவே அந்த ஊராட்சிகள் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இதுதவிர பெள்ளாதி, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, நெ.10முத் தூர், சீரப்பாளையம், குருடம்பாளையம், பொலிகவுண்டம்பாளையம், ஜமீன்முத்தூர், கள்ளிபாளையம், 

போகம் பட்டி, ஜே. கிருஷ்ணாபுரம், ஜல்லிபட்டி, மாதம்பட்டி ஆகிய 13 கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

பணம் பறிமுதல்

இதனால் அந்தந்த ஊராட்சிகள் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருக்கும். எனவே அந்த பகுதிகளில் ரூ.50 ஆயிரத் திற்கு மேல் ரொக்கமாக பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். 

ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். அந்த பணம், மாவட்ட கரூவூலத் தில் ஒப்படைக்கப்படும். 

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 2 ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு பறக்கும்படை வீதம் அமைக்கப்பட்டு உள்ளன. 

ஒரு பறக்கும் படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தஸ் தில் ஒரு அலுவலர், போலீஸ் காரர் ஒருவர், ஒரு வீடியோ கேமராமேன் இருப்பார். வாகன சோதனைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

 அவர்கள், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனை செய்வார்கள். மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பணியில் ஈடுபடுவர்.

மாவட்ட கவுன்சிலர் தேர்தல்

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தல் நடக்கிறது. இங்கு மட்டும் அரசியல் கட்சியினரின் அங்கீகரிக் கப்பட்ட சின்னம் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும். 

எனவே இந்த பகுதியில் கூடுதல் கவனத்துடன் பறக்கும் படையினர் சோதனை மேற்கொள்வர். 

மேலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த பகுதியில் தேர்தல் முடியும் வரை புதிய வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story