திண்டுக்கல்லில் கிராம சுகாதார செவிலியர்கள் விடுப்பு போராட்டம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் விடுப்பு எடுத்தனர்.
திண்டுக்கல்:
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் விடுப்பு எடுத்தனர்.
கிராம செவிலியர்கள் விடுப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு கிராம சுகாதார செவிலியர்களை வாகனத்தில் அழைத்து சென்று திரும்பி அழைத்து வரவேண்டும். மேலும் தாய்-சேய் நலப்பணிக்கு செல்லும் நாட்களில் கொரோனா தடுப்பூசி பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொரோனா தடுப்பூசி பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
அதேபோல் வாரத்தில் ஒருநாள் விடுமுறை, பண்டிகை நாட்களில் அரசு விடுமுறை அனுமதிக்க வேண்டும். சஞ்சீவினி, மினிகிளினிக் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்பட 9 கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம செவிலியர்கள் சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
மேலும் மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில் செயலாளர் ரோணிக்கம், பொருளாளர் ஒச்சம்மாள் உள்பட ஏராளமான செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்தபடி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story