மாவட்ட செய்திகள்

உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் + "||" + Innovative Struggle Before the Assistant Collector's Office

உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்

உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேதாஜி நற்பணி இயக்க தலைவர் மா.பாலமுருகன் தலைமையில், வீரவிடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முருகேசன், ரத்தினவேல், கிருஷ்ணசாமி, அரசுராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் திரண்டு வந்தனர். அலுவலகம் முன்பு ஒருவரை இறந்தவர் போல் படுக்க வைத்து, அவர் உடலுக்கு சங்கு ஊதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடத்தினர். பின்னர் உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருந்த தாவது:-
கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்கு சிலை அமைக்க வேண்டும். அவரது பெயரில் நடந்த ஆட்டுச்சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நகராட்சிக்கு பொது மயானத்தில் தண்ணீர், கழிப்பிடம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும், என கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசார் நூதன போராட்டம்
கோவில்பட்டியில் காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினார்.
2. சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம்
நெல்லையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி, மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு சகதியில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மின்கம்பத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்
ராமநாதபுரத்தில் எரியாத மின்விளக்குகள் அமைந்துள்ள மின்கம்பங்களுக்கு பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.
4. ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
5. தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.