மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு


மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Sept 2021 9:28 PM IST (Updated: 14 Sept 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு.

பொன்னேரி,

பொன்னேரி அருகே கும்மனூர் கிராமத்தின் வழியாக செல்லும் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வாலிபர்கள் தொடர்ந்து ஈடுபடுவதால் எதிரே வரும் வாகனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இதனால் விபத்துகள் ஏற்படுவதை அறிந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மோட்டார்சைக்கிள் பந்தயத்திற்கு தடை விதித்த நிலையில், பந்தயத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி சோழவரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் கண்காணித்தனர்.

அப்போது, அங்கு அதிவேகமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வந்த மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார், பெரம்பூரை சேர்ந்த சூர்யா (வயது 21), காசிமேட்டை சேர்ந்த ஜெயக்குமார் (24), அரவிந்தன் (19), திருமலை (20), பொன்னேரி தச்சூர் பகுதியை சேர்ந்த ரவி (23), சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த மோகன்குமார் (19), செங்குன்றத்தை சேர்ந்த கணேஷ் (19) உள்பட 9 பேர் மீது சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story