திண்டுக்கல்லில் பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்து மயங்கி விழுந்த மாணவன்
திண்டுக்கல்லில் பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி மேனகா. இவர்களது மகன் பிரதீப் (வயது 12). இவன் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் ரூ.10-க்கு தனியார் நிறுவன குளிர்பான பாட்டில் ஒன்றை பிரதீப் வாங்கினான்.
பின்னர் வீட்டுக்கு வந்து அந்த குளிர்பான பாட்டிலை திறந்து குடித்தான். அந்த பாட்டிலுக்குள் குளிர்பானத்தில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது. தனது தாயிடம் குளிர்பானத்தில் பல்லி இறந்து கிடப்பதாகவும், அதனை குடித்து விட்டதாக அவன் கூறினான். சற்று நேரத்தில் வீட்டில் பிரதீப் மயங்கி விழுந்தான். இதை பார்த்து அவனுடைய தாய் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story