சாராயம் காய்ச்சிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது


சாராயம் காய்ச்சிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2021 10:32 PM IST (Updated: 14 Sept 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

சாராயம் காய்ச்சிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது


சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கேசவன் மகன் அய்யப்பன்(வயது 46), செல்லமுத்து மகன் முருகன்(49). சம்பவத்தன்று இவர்கள் அதே ஊரில் உள்ள வயல் பகுதியில் சாராயம் காய்ச்சும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 

இதுபற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசாரை கண்டதும் அய்யப்பன், முருகன் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று பழையனூர் பகுதியில் நின்று கொண்டிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story