மாவட்ட செய்திகள்

கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி + "||" + death

கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி

கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி, செப்.15-
கிருஷ்ணகிரியில் டிப்பர் லாரி- மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலியானார்கள்..
விபத்து 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவர் கிருஷ்ணகிரியில் கட்டிட வேலைக்காக காவேரிப்பட்டணம் கொசமேடு பகுதியை சேர்ந்த மேகலா (35), லட்சுமி (32) ஆகிய 2 பேரையும் அழைத்துக்கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் நேற்று வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் காலை 9 மணி அளவில் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் சிக்னலில் நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் திருப்பத்தூரிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற டிப்பர் லாரியும் அருகில் நின்றது. சிக்னலில் பச்சை விளக்கு எரிந்த உடன் டிப்பர் லாரியை டிரைவர் ஓசூர் நோக்கி செல்வதற்காக இயக்கினார்.
2 பேர் பலி 
அந்த நேரம் கிருஷ்ணகிரி நகருக்குள் செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்ற சக்திவேல் வலதுபுறமாக மோட்டார்சைக்கிளை திருப்ப முயன்றார். இதில் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் அடியில் சிக்கி சக்திவேல், மேகலா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். லட்சுமி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிப்பர் லாரி டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டு அடுத்த கொடுகூர் பகுதியை சேர்ந்த சம்பத் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் சிக்னலில் நடந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிகப்பட்டது.