தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டார்


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டார்
x
தினத்தந்தி 14 Sept 2021 10:44 PM IST (Updated: 14 Sept 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டார். இதில் உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், முத்தையன், தாசில்தார்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பாலக்கோட்டில் 267 வாக்குச்சாவடிகளும், பென்னாகரத்தில் 292 வாக்குச்சாவடிகளும், தர்மபுரியில் 306 வாக்குச்சாவடிகளும் உள்ளன. பாப்பிரெட்டிப்பட்டியில் 314 வாக்குச்சாவடிகளும், அரூர் (தனி) தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும் உள்ளன.
முறையீடுகள்
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,478 ஆகும். வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம். 500 வாக்காளர்களுக்கு அதிகமாக இருந்தால் வாக்குச்சாவடியை பிரித்து புதிதாக வாக்குச்சாவடி நிலையங்களை உருவாக்குதல் போன்ற விவரங்கள் இருப்பின் உடனடியாக அனுப்பி வைக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
எனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.

Next Story