மாவட்ட செய்திகள்

அரூர் அருகேமொபட் மீது லாரி மோதல் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி + "||" + Retired headmaster killed

அரூர் அருகேமொபட் மீது லாரி மோதல் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி

அரூர் அருகேமொபட் மீது லாரி மோதல் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி
அரூர் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலியானார்.
அரூர்:
அரூர் அருகே உள்ள எச்.தொட்டம்பட்டியை சேர்ந்தவர் காணன் (வயது 70). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அரூர்-சேலம் சாலையில் எச்.தொட்டம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது சேலத்தில் இருந்து வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.