குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டெருமை


குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டெருமை
x
தினத்தந்தி 14 Sep 2021 5:14 PM GMT (Updated: 14 Sep 2021 5:14 PM GMT)

குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டெருமை

குன்னூர்

குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டெருமைகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அச்சமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை ரெய்லி காம்பவுண்ட், மாடல் ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் காட்டெருமையை விரட்ட முயன்றனர். ஆனாலும் காட்டெருமை அதே பகுதியில் நின்று கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 பின்னர் 2 மணி நேரத்திற்கு பிறகு காட்டெருமை நகராட்சி பூங்காவிற்கு நுழைந்தது. தொடர்ந்து காட்டெருமை அந்த பகுதியிலேயே உலா வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே காட்டெருமையை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story