ஊட்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊட்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2021 10:44 PM IST (Updated: 14 Sept 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி

தபால் ஊழியர்களை வணிக இலக்கு என்ற பெயரில் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை அடைய வேண்டும் என நெருக்கடி கொடுப்பதை கண்டித்து அனைத்திந்திய தபால் ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டியில் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு தபால் ஊழியர் சங்க கோட்ட தலைவர் ஜெயக்குமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சேமிப்பு கணக்கு, காப்பீடு, தங்க பத்திர திட்டம், ஆதார் சேவை போன்ற தபால் துறை திட்டங்களுக்கு அதிக இலக்குகளை அடைய சொல்லி கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், இதனால் ஊழியர்கள், தபால்காரர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 இதனால் அன்றாட தபால் பட்டுவாடா பணி பாதிக்கப்படுகிறது. எனவே, தபால் ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story