பொதுமக்கள் சாலை மறியல்
மூங்கில் தொழுவு ஊராட்சியில் குடிநீர் குழாய் பதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிமங்கலம்
மூங்கில் தொழுவு ஊராட்சியில் குடிநீர் குழாய் பதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் குழாய்
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது மூங்கில்தொழுவு ஊராட்சி. மூங்கில்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட தோட்டத்து சாலை பகுதிகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் புதிதாககுடிநீர் குழாய் இணைப்பு கொடுப்பதற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி செல்லும் வழியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து குடிநீர் குழாய் பதிக்கும் பணியை உடனே நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் போலீசார்,குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் சுப்பிரமணியம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு தீர்வு காணப்படும் எனகூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story