அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டுமா
உடுமலை அருகே புக்குளத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் இன்று புதன்கிழமை உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
உடுமலை
உடுமலை அருகே புக்குளத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் இன்று புதன்கிழமை உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
ஆணையாளர் அறிக்கை
உடுமலை நகராட்சி ஆணையாளர் கூடுதல் பொறுப்பு எஸ்.எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
உடுமலை அருகே உள்ள புக்குளத்தில், தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின்கீழ் 320 வீடுகளைக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க உடுமலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் இன்றுபுதன்கிழமை நடைபெறுகிறது. மேலும் வீடுகள் தேவைப்படுவோர்வருகிற 20ந் தேதி வரை காலை10 மணிமுதல் மாலை 5 மணிவரை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் தேவைப்படுவோர் குடும்பத்தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களது ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி இருப்பு கையேடு நகல், குடும்பத்தலைவரின் புகைப்படம், கைபேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பயன்பெற, பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக மட்டுமே இருக்க வேண்டும். பயனாளியின் பங்களிப்பு தொகையாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து700ஐ முன்பணமாக செலுத்தவேண்டும். பயனாளிகள், எனது குடும்பத்தாருக்கு இந்தியாவில் சொந்த வீடோ, நிலமோ இல்லையென்றும், அரசு வழங்கும் குடியிருப்பு வீட்டை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ மாட்டேன் என்றும் உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story