மாணவர்கள் இடம்பிடித்து சாதனை


மாணவர்கள் இடம்பிடித்து சாதனை
x
தினத்தந்தி 14 Sept 2021 11:18 PM IST (Updated: 14 Sept 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

பொறியியல் தரவரிசை பட்டியலில் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர்
பொறியியல் தரவரிசை பட்டியலில் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். 
பொறியியல் தரவரிசை பட்டியல் 
பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி இருந்தனர். நடப்பாண்டில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
இதில் 87 ஆயிரத்து 291 மாணவர்கள். 51 ஆயிரத்து 730 பேர் மாணவிகள். 3ம் பாலினத்தவர் 12 பேர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 13 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். 
5 பேர் இடம் பிடித்து சாதனை 
இந்த தரவரிசை பட்டியலில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாநில அளவில் மாணவன் பார்த்திபன் 2வது இடமும், திருமுருகன் 3வது இடமும், லோகநாதன் 5வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 
இதுபோல் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் செல்வக்குமார் 120வது இடமும், எஸ்.சி.ஏ பிரிவில் சந்துரு 84வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த 5 மாணவர்களை பலரும் பாராட்டினார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறும்போதுமிக, மிக, சாதாரண பின்புலத்தில் இருந்து இந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். பலரது குடும்பமும், திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறவர்கள். இந்நிலையில் முதல்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவமாணவிகளை வாழ்த்துகிறோம் என்றார்.

Next Story