மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 14 Sep 2021 5:55 PM GMT (Updated: 2021-09-14T23:25:46+05:30)

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மங்களமேடு
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத்துடிக்கும் மத்திய அரசை கண்டித்து வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குன்னம் ஒன்றிய செயலாளர் சின்னப்பொண்ணு தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் கீதா, மாவட்ட துணைத் தலைவர் கலையரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து  தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணி நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்கக் வேண்டும் எனபன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுக்கச் சென்றனர். அப்போது அவர் அங்கு இல்லாத காரணத்தால் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்த பிறகு அவரிடம் மனுவை கொடுத்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரினர். சின்னப்பொண்ணு கொடுத்த 401 மனுக்களை பெற்று ஒப்புகைச் சீட்டு கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story