மாவட்ட செய்திகள்

பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது + "||" + Billhook

பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது

பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது
பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அடுத்த மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). கொத்தனாரான இவர், ஒரு பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர் கார்த்திக்கை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர் கார்த்திக்கை அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த கார்த்திக் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை அரிவாளால் வெட்டியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமருகல் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கைது
திருமருகல் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை