மாவட்ட செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + women suicide

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குன்னத்தூர்
குன்னத்தூர் அருகே செம்மாண்டம்பாளையம் கோல்டன் நகரில் வசிப்பவர் பூங்கொடி வயது 32. இவரது கணவர் கவுரிசங்கர் வீடுகளுக்கு வயரிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2009ம்ஆண்டு திருமணம் நடைபெற்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கவுரிசங்கருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி போதையில் மனைவியுடன் சண்டை பிடித்து வருவாராம். மேலும் மனைவியின் பெயரில் வீட்டுமனை ஒன்று உள்ளது. அந்த மனையை  விற்று விடும்படி அடிக்கடி கணவர் கவுரிசங்கர் மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார்.பூங்கொடி நமது குழந்தைகள் இன்னும் சிறு குழந்தைகளாக உள்ளனர். அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்கள் செலவுக்கு ஆகும் என்று கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  நேற்று காலை 5 மணிக்கு கவுரிசங்கர் மனைவியை தேடியபோது காணவில்லை.மாடிக்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்தபேனில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னத்தூர் போலீசார் பூங்கொடியின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காரிமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காரிமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் தற்கொலை முயற்சி
எட்டயபுரம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
4. குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. தர்மபுரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.